Loading...

இளைஞர்களை மயக்கி ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும் தம்பதியைப் பற்றி தெரியுமா ?

gjhhgf

புலத் சிங்கள பகுதியில் மிக மிக அழகான பெண் ஒருவர் அடிக்கடி பஸ் நிலையத்தில் நிற்க்கும் இளைஞர்களிடம் பழகி அவர்களது தொலைபேசி இலக்கங்களை வாங்குவது வழக்கமாம். பின்னர் அவர்களோடு பேசி ஹோட்டலில் ரூம் போட்டால் வருவேன் என்று தேன்

ஒழுகப் பேசுவது வழக்கம். இதனை நம்பி பல இளைஞர்கள் ஹோட்டல் ரூம் போட்டு அப்பெண்ணை அழைத்துச் செல்வதுண்டு. ஆனால் திடீரென ஒருவர் ஹோட்டல் அறையைத் தட்டி, தான் மேனேஜர் என்றும். பொலிசார் வேறு ஒரு கேஸ் விடையமாக எல்லா ரூமையும் செக் செய்கிறார்கள். நீங்கள் உண்மையான தம்பதிகள் என்றால் இருங்கள். இல்லையென்றால் உடனே காலிசெய்யுங்கள். பின்னர் மீண்டும் ஒரு நாள் வரலாம் என்று அறிவுரை கூறுவாராம். இது வேறு யாரும் அல்ல அந்த அழகான பெண்ணின் கணவர் தான். இதனால் கிலிகொள்ளும் இளைஞர்கள் உடனே பதறியடித்து அப்பெண்ணோடு வெளியேறிவிடுவது வழக்கம். ஆனால் அதற்கு முன்னரே குறித்த அப்பெண் 18,000 முதல் கொண்டு 20,000 அல்லது 25,000 ரூபாவை பறித்து விடுவார். அவர் அந்தக் காசோடு மாறிவிடுவார். இது பலகாலமாக நடந்து வந்துள்ள நிலையில். இறுதியாக இரு நண்பர்கள் ஒன்றாக சென்றவேளை (இந்த இருவருக்கும் இப்படி முன்னரே நடந்துள்ளது) அவர்கள் கணவரையும் அப்பெண்ணையும் ஒன்றாக சந்தித்துள்ளார்கள். அவர்கள் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து பொலிசார் உடனே நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

Loading...
200
-